Sunday, March 22, 2009

அவஸ்தை

பெண்ணே
உன்னை நிலவோடு ஒப்பிட்டு பாத்தேன் ....
நீ அழகாய் இருப்பாய் என்பதற்காகவா ....
இல்லைஅருகில் இருந்தால ...
அவஸ்தை எனக்கு தானே என்று..........

அறிந்ததும் .......அறியாததும்.......!!

ஒன்றும் அறியாதவனுக்கோ
ஒரு கேள்வியும் தோன்றுவது இல்லை ......
நன்றாய் அறிந்தவனுக்கோ
பல கேள்விக்கு பதில் இல்லை.......!!!

முரண் ............

என் ரசனைகளை பிடிக்கவில்லை ...........
நான் ரசித்தவைகளையும் பிடிக்கவில்லை ..............
என்னை ரசிப்பவர்களையும் பிடிக்கவில்லை உனக்கு
என்னை நேசிக்க மட்டும் பிடித்தது எப்படி.............??
என்னை மறந்து நான் உன்னை சுவாசித்ததனாலா............???

தாய் ..............

உன்னை ஈன்றபொழுது நினைக்கவில்லை .............
உன்னை வளர்க்கும் வரையிலும் நினைக்கவில்லை ..
என்னை தவிக்கவிட்டு செல்வாய் என ...........
என் தவிப்புகள் நான் இருக்கும் வரை மட்டுமே........
ஆனால் நீ இருக்கும் வரை உன்னையே நினைத்து .....
தவம் கொண்டு உயிர்ப்பவளை ..........
தவற விட்டுவிடாதே............

நீயான .............நான் !!

நீ செய்யும் தவறை நியாயப்படுத்துகிறாய்................
நான் செய்யும் தவறை தட்டி கேட்கிறாய் ................
நீ சொல்வதை கேட்க சொல்கிறாய் .................
நான் சொல்வதை கேட்க மறுக்கின்றாய்...........
நீ வேண்டும் என்று தானே ...............
நான் என்னை விட்டு வந்தேன்...........
நீ வேண்டாம் என்றால் ..................
நான் எங்கே செல்வேன் ...............
நீ விரும்பினால் ...........
நான் விலகி விடுகிறேன் ............
உன்னைவிட்டு அல்ல இம்மண்ணை விட்டு.............!!

!!!

இனி எப்போது சந்திப்போம்
என்ற ஏக்கத்தில் இருக்கும் சந்தோஷம்........(காதலனாக)
எப்பொழுதும் சந்திப்பதில் இருப்பதில்லையே.......(கணவனாக)

ஏன்....?

தவழும் முன் நடக்கவும் .....
பேசும் முன் பையிலவும் .........
கற்றுகொடுத்தாய் .......
நான் வாழ்வதற்க்கு முன் நீ வீழ்ந்ததேன் ....
தந்தையே...?